About Alpha Mind Power
ஆல்ஃபா தியானத்தின் மூலம் உங்கள் ஆழ்மன சக்தியை கண்டறியுங்கள்
ஆல்ஃபா மைண்ட் பவர் பற்றி
ஆல்ஃபா மைண்ட் பவர் ஸ்ரீமாதாவால் 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஸ்ரீமாதா பழம் பெரும் சித்தர்களின் தீட்சை பெற்றிருக்கிறார். 1990ம் ஆண்டிலிருந்து பல தியான முறைகளை ஆராய்ச்சி செய்து அவர் உருவாக்கியது தான் ஆல்ஃபா மைண்ட் பவர் என்ற வகுப்பு.
ஸ்ரீமாதா ஆயிரக்கணக்கானவர்களுக்கு தீட்சை அளித்திருக்கிறார். அவர்களது மனோ சக்தியை அதிகரித்து, உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தி, வாழ்க்கையை நல்ல முறையில் அனுபவிக்க இது உதவியிருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஸ்ரீமாதா தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கி இருக்கிறார். வாழ்க்கையின் பல சிக்கல்களை சமாளிக்க உதவியுள்ளார். பல லட்ச மக்கள் ஸ்ரீமாதாவின் பேச்சை பல்வேறு டிவி சேனல்களில் கேட்டு பயனடைந்திருக்கிறார்கள். தூர்தர்ஷன் போதிகை, ஜெயா பிளஸ் டிவி, ஜெயா டிவி, சன் டிவி, மக்கள் டிவி, சங்கரா டிவி போன்ற பல டிவி சேனல்களில் ஸ்ரீமாதா பேசியுள்ளார். அவரது கட்டுரைகள் மங்கையர் மலர், குமுதம் பக்தி, மனோசக்தி மற்றும் தினத்தந்தி ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.
அவர் பல்வேறு வகுப்புகளை வடிவமைத்து அவை கலந்து கொள்பவர்களுக்கு மிகவும் பிடித்து இருக்கின்றன. இந்தியா மற்றும் வெளிநாட்டில் பல பெரிய நகரங்களில் இந்த வகுப்புகளை நடத்தயுள்ளார். தற்போது வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறுகின்றன. ரிஷிகேஷ் மற்றும் தேனி ஆசிரமங்களில் ஸ்ரீமாதாவால் நடத்தப்படும் முகாம்கள் அவரது சீடர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. ஆல்ஃபா சித்தர்களை இருமுறை கைலாயத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். மேலும் ஸ்ரீமாதா தனது சீடர்களை மகாவதார் பாபாஜி, லஹரி மஹாசாயா மற்றும் வசிஷ் ரிஷி ஆகியோரின் குகைகளுக்குச் அழைத்து சென்று அங்கு தியானம் செய்ய உதவியிருக்கிறார். ஸ்ரீமாதாவின் பேச்சை யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்இனில் காணலாம். தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மாற்றங்களை செய்வதால், ஸ்ரீமாதாவின் வகுப்புகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. புதுமையாகவும், பயனுள்ளதாகவும், மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், மனோ சக்தியை அதிகரிப்பதாகவும், எல்லாவற்றையும் விட மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் பாராட்டப்படுகின்றன!
ஏன் ஆல்ஃபா மைண்ட் பவர்
ஸ்ரீமாதாவால் நிறுவப்பட்டது
இந்தியாவின் பழம் பெரும் சித்தர்களின் தீட்சை பெற்றவர், தியானம் மற்றும் ஆலோசனையில் பல ஆண்டுகள் அனுபவம்
பலரது நிரூபிக்கப்பட்ட அனுபவங்கள்
ஆயிரக்கணக்காணோருக்கு ஆல்ஃபா தியானத்தில் தீட்சை, நூற்றுக்கணக்காணோருக்கு தனிப்பட்ட ஆலோசனை, லட்சக்கணக்காணோருக்கு சொற்பொழிவுகளால் ஊக்கம்
ஆன்லைன் வகுப்புகள் & ஆன்மீக யாத்திரைகள்
ஆன்லைன் தியான வகுப்புகள் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் தரும் முகாம்கள்.
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வேண்டுமா?
சூழ்நிலையின் கைதியாக இருப்பதை மாற்றி சூழ்நிலைகளை உருவாக்கும் சூத்திரதாரியாக மாறுங்கள்!
தொடங்குங்கள்